காரைக்குடி செல்போன் கோபுரத்தில் திடீர் தீ: பெரும் தீவிபத்து தவிர்ப்பு

காரைக்குடி செல்போன் கோபுரத்தில் திடீர் தீ:  பெரும் தீவிபத்து தவிர்ப்பு
X
தீப்பிடித்து எரிந்த செல்போன் கோபுரம்.
காரைக்குடி செல்போன் கோபுரத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டாதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பழைய அரசு மருத்துவமனை பின்புறம் பட்டுக்கோட்டையார் வீதியில் தனியாருக்குச் சொந்தமான செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருந்து வரும் நிலையில், சுமார் 90 அடி நீளத்தில் அமைந்துள்ள செல்போன் கோபுரத்தின் உச்சியில் மின்னணு சாதனங்கள் பொருத்தப்பட்டிருந்த பெட்டி திடீரென தீப்பற்றி எரிந்தது.

இதனைக் கண்ட குடியிருப்புவாசிகள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.

செல்போன் கோபுரத்தில் இருந்த மின்னணு சாதனங்கள் மட்டும் சேதமாகி பெரும் விபத்து தவிர்க்கப்பட்ட நிலையில், தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!