மீனவர்கள்மீதான தாக்குதலுக்கு தீர்வு காணப்படும்: இலங்கைஅமைச்சர் ஜீவன் தொண்டைமான்

மீனவர்கள்மீதான தாக்குதலுக்கு தீர்வு காணப்படும்: இலங்கைஅமைச்சர் ஜீவன் தொண்டைமான்
X

காரைக்குடியில் பேட்டியளித்த இலங்கை தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டைமான்.

இலங்கை மற்றும் தமிழக அரசுகளின் உறவு நன்றாக உள்ளது

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து விசாரணை குழு அமைத்து தீர்வு காணப்படும் என்றார் இலங்கை தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டைமான்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே தனியார் விவசாய கல்லூரியில் நடைபெற்ற விழாவில், பங்கேற்க வந்த இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டைமான் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: தமிழக முதலமைச்சர் இலங்கை அகதி என்ற வார்த்தையை நீக்கி "மறுவாழ்வு மையம் " என மாற்றம் செய்ததை வரவேற்கிறேன்.இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் வசிப்பவர்களுக்கு ரூ.317 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது வரவேற்கதக்கது.இலங்கை மற்றும் தமிழக அரசுகளின் உறவு நன்றாக உள்ளது.தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவம் குறித்து விசாரணை குழு அமைத்து தீர்வு காணப்படும் என்றார் அவர்:

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!