காரைக்குடியில் பாதாள சாக்கடை பணிகள் தாமதம். ஆட்சியர் நேரில் ஆய்வு.

காரைக்குடியில் பாதாள சாக்கடை பணிகள் தாமதம். ஆட்சியர் நேரில் ஆய்வு.
X

காரைக்குடியில் பாதாள சாக்கடை பணிகளை ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்

காரைக்குடியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டம் மிகவும் தாமதமாக நடந்து வருவதாக எழுந்துள்ள புகாரை அடுத்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே பாதாள சாக்கடை திட்டம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.காரைக்குடி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பழைய பேருந்து நிலையம் வழியாக மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய முக்கிய ஊர்களுக்கு செல்லக் கூடிய பிரதான சாலையான இச்சாலையில், சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடைபெறும் பணி மிகவும் தாமதமாக நடைபெற்று வருவதால், தினமும் போக்குவரத்து நெரிசலால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.

எனவே,பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க வணிகர்கள் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டிக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர். அதனடிப்படையில் மாவட்ட ஆட்சியர் பாதாள சாக்கடை திட்ட பணிகளை நேரில் ஆய்வு செய்தார் அதன்பின் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!