தேவகோட்டையில் அனுமதி இல்லாமல் விற்பனை செய்த பட்டாசு பறிமுதல்

தேவகோட்டையில் அனுமதி இல்லாமல் விற்பனை செய்த  பட்டாசு  பறிமுதல்
X
வீட்டுக்குள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 2 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன

தேவகோட்டையில் அனுமதி இல்லாமல் விற்பனை செய்த 2 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை விநாயகபுரம் 2 வது தெருவில் வீட்டு வாசலில் அனுமதி இல்லாமல் விற்பனை செய்ததாக, நகர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நகர் காவல் ஆய்வாளர் சரவணன் விரைந்து சென்று அனுமதி இல்லாமல் விற்பனை செய்த பட்டாசுகளை கைப்பற்றினர். மேலும், வீட்டுக்குள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 2 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் இருந்த 28 அட்டை பெட்டிகளை பறிமுதல் செய்து, விற்பனை செய்த செல்வமணி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் பறிமுதல் செய்த பட்டாசுகளை அரசு கிடங்குக்கு அனுப்பி வைத்தனர்.


Tags

Next Story
ai and business intelligence