காரைக்குடி காளவாய் பொட்டல் பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைத்து தர கோரிக்கை

காரைக்குடி காளவாய் பொட்டல் பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைத்து தர கோரிக்கை
X

காரைக்குடி காளவாய் பொட்டல் பகுதியில் முறையான கழிவுநீர் கால்வாய் அமைத்து தர நகராட்சி ஆணையரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு.

மழைநீருடன் கழிவு நீரும் கலப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்

தென்கிழக்கு வங்க கடல் முதல் தமிழக கடலோரப் பகுதி வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மற்றும்

தெற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும். இதனை அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கரையை நெருங்ககூடும். இதன்காரணமாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடி காளவாசல் பகுதியில் சுமார் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன.

இங்குள்ள என் எஸ் கே தெரு, பாரதியார் தெரு போன்ற பல தெருக்களில் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக, வீடுகள் முன் மழை நீர் சூழ்ந்து வீட்டைவிட்டு வெளியில் வரமுடியாமல் இயல்பு வாழ்க்கை பாதித்தது. மேலும் மழைநீருடன் கழிவு நீரும் கலப்பதால் சுகாதார சீர்கேடு நிலவும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந் நிலையில்,இன்று காரைக்குடி நகராட்சி ஆணையாளரை சந்தித்து,தங்கள் பகுதிக்கு முறையான கழிவுநீர் கால்வாய் வசதி செய்து தர கோரிக்கை மனு அளித்தனர்.


Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது