குடியரசு தினம்: காரைக்குடி அழகப்பா பல்கலைகழகம் சார்பில் மினி மாரத்தான் போட்டி.

குடியரசு தினம்:  காரைக்குடி அழகப்பா பல்கலைகழகம் சார்பில் மினி மாரத்தான் போட்டி.
X

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் குடியரசு தினத்தையொட்டி நடந்த  மினி மாரத்தான் போட்டி

25 வயதிற்குட்பட்டவர்களுக்கு நடத்தப்பட்ட மாரத்தான் போட்டிக்கு 5 கிலோமீட்டர் பந்தய தொலைவு நிர்ணயிக்கப்பட்டிருந்தது

குடியரசு தினத்தை முன்னிட்டு, காரைக்குடி அழகப்பா பல்கலைகழகம் சார்பில் நடத்தப்பட்ட மினி மாரத்தான் போட்டியில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

நாட்டின் 73வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சார்பில் மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. 25 வயதிற்குட்பட்டவர்களுக்கு நடத்தப்பட்ட மாரத்தான் போட்டிக்கு 5 கிலோமீட்டர் பந்தய தொலைவு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. போட்டியில் சுமார் 100 -க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நிலையில், நீலகிரி மாவட்டத்தைச்சேர்ந்த குணாளன் என்பவர் முதலாவதாக வந்து முதல் பரிசான ரூ. 7000 ரொக்கபரிசை வென்று அனைவரின் பாராட்டையும் பெற்றார்.


Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!