/* */

தேவகோட்டையில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தேவகோட்டை பேருந்து நிலையத்திலிருந்து ராம்நகர் வரை 2 கி.மீ தொலைவுக்கு இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன

HIGHLIGHTS

தேவகோட்டையில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்
X

சிவகங்கைமாவட்டம், காரைக்குடிதொகுதிக்குள்பட்ட தேவகோட்டையில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்ட போலீஸார்.

தேவகோட்டையில், போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்.காவல் ஆய்வாளர் நடவடிக்கை.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பேருந்து நிலையத்திலிருந்து,ராம் நகர் வழியாக மதுரைக்கு செல்லு மாநில நெடுஞ்சாலையில் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்புகள் பெருகி வந்தன. இதனால் போக்குவரத்து நெரிசலில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் காயமடைந்து மருத்துவமனை செல்லும் சூழ்நிலை நிலவி வந்தது.சில சமயங்களில் உயிர்பலியும் ஏற்பட்டதையடுத்து,

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில் குமாருக்கு, தேவகோட்டை பொதுமக்கள் சார்பில் தொடர்ந்து புகார்கள் சென்றன. புகாரின் அடிப்படையில் ஆக்கிரமிப்புகளை அகற்றம் செய்ய நகர காவல் ஆய்வாளருக்கு மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். இதனையடுத்து, காவல் ஆய்வாளர் சரவணன் இன்று தேவகோட்டை பேருந்து நிலையத்திலிருந்து ராம்நகர் வரையிலான 2 கி.மீ தொலைவுக்கு காவலர்களுடன் நடந்து சென்று ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார்.

நெடுஞ்சாலையின் இருபுறமும் கடைகளின் முன்பு வைக்கப்பட்டிருந்த பேனர், பிளக்ஸ் போர்டு, விளம்பர பதாகைகள் என சுமார் மூன்று லட்சம் பெறுமானமுள்ள பொருள்களை பறிமுதல் செய்து, சரக்கு வாகனங்களில் ஏற்றி காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தார். காவல் ஆய்வாளரின் இந்த நடவடிக்கைக்கு தேவகோட்டை பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.


Updated On: 18 Sep 2021 3:43 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?