மழையால் பாதிக்கப்பட்ட நரிக்குறவர்களுக்கு நிவாரண பொருட்கள்

மழையால் பாதிக்கப்பட்ட நரிக்குறவர்களுக்கு நிவாரண பொருட்கள்
X

சித்தானூர் சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள நரிக்குறவர்கள் 

தேவகோட்டை அருகே மழையால் பாதிக்கப்பட்ட நரிக்குறவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது

சிவகங்கை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தினசரி பெய்து வருவதால் ஏரி குளம் கண்மாய் நிரம்பி தண்ணீர் மறுகால் பாய்ந்து செல்கிறது. மேலும் வீடுகளை சுற்றிலும் தண்ணீர் தேங்கி கிடைக்கிறது. இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேவகோட்டை அருகே வசித்து வரும் சுமார் 70 மேற்பட்ட நரிக்குறவர்கள் மழையினால் தங்குவதற்கு இடமின்றியும், உணவிற்கும் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். நரிக்குறவர் குடும்பத்தினரை பாதுகாக்கும் விதமாக சித்தானூர் சமுதாய கூடத்தில் நரிக்குறவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்து ஒரு வாரத்திற்குத் தேவையான அரிசி, மளிகை சாமான்,காய்கறிகளை கோட்டாட்சியர் பிரபாகரன் முன்னிலையில் நரிக்குறவர்களுக்கு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் தாசில்தார் அந்தோணி தாஸ், கண்ணங்குடி ஒன்றிய பெருந்தலைவர் சித்தானுர் கார்த்திக், கலந்து கொண்டனர்.

Tags

Next Story