ரேஷன் அரிசி கடத்தி வந்த லாரி கவிழ்ந்து விபத்து: டிரைவர் தப்பி ஓட்டம்
X
By - G.Suresh Kannan, Reporter |8 Jan 2022 10:18 AM IST
காவல் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று 70 மூடை ரேஷன் அரிசியை கைப்பற்றி குடிமைப்பொருள் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்
ரேசன் அரசி கடத்தி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் இன்று காலை 70 மூடை ரேஷன் அரிசியை ஏற்றி பட்டை தீட்டுவதற்கு ரைஸ் மில்லுக்கு கொண்டு செல்வதற்காக திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற மினி சரக்கு வாகனம், எதிர்பாராத விதமாக டயர் வெடித்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அதிருஷ்டவசமாக காயம் இன்றி தப்பிய டிரைவர் தப்பியோடி தலைமறைவானார். இவ்விபத்து குறித்து தகவலறிந்த குன்றக்குடி காவல் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று கடத்தி வரப்பட்ட 70 மூடை ரேஷன் அரிசி கைப்பற்றி குடிமைபொருள் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும், தப்பியோடிய வேன் டிரைவரை குன்றக்குடி போலீஸார் தேடிவருகின்றனர்
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu