குடிநீர் கேட்டு திருப்பத்தூர் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

குடிநீர் கேட்டு திருப்பத்தூர் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை
X

குடிநீர் பிரச்சனையை தீர்க்கக்கோரி, திருப்பத்தூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள். 

குடிநீர் வழங்கக்கோரி, திருப்பத்தூர் பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

சிவகங்கை மாவட்டம், திண்டுக்கல் சாலை, அச்சுக்கட்டு பகுதியில், 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்று அப்பகுதியினர் குற்றம்சாட்டி வந்தனர். இதனால், அப்பகுதி மக்கள் அவ்வழியாக சிங்கம்புணரி பகுதிக்கு செல்லும் காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட ஏர்வால்வில் கசிந்த நீரை பிடித்து வந்தனர்.

இந்நிலையில், அந்த ஏர் வால்வை அதிகாரிகள் அடைத்தனர். இதனால் தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. குடிநீர் தட்டுப்பாட்டால் அதிருப்தி அடைந்த அப்பகுதி பெண்கள், ஆண்கள், இன்று திருப்பத்தூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து பேரூராட்சி செயல் அலுவலர் ராதாகிருஷ்ணனிடம் மனு கொடுத்தனர். பிறகு வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் வெங்கடேசனிடமும் இது தொடர்பாக மனு கொடுத்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags

Next Story
ஈரோட்டில் தங்கம், வெள்ளி விலை இன்றைய நிலவரம் தெரியுமா?