காரைக்குடியில் குடியிருப்பு பகுதியில் மதுபானக்கடை : மக்கள் போராட்டம்
காரைக்குடியில் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
காரைக்குடியில் அரசு டாஸ்மாக் மதுபான கடையை குடியிருப்பு பகுதியில் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியின் மையப்பகுதியான 100 அடி ரோடு திருவள்ளுவர் தெரு குடியிருப்பு பகுதியில் அரசு மதுபான கடை அமைக்க பணிகள் நடந்து வருகிறது..இதனை அறிந்த அப்பகுதி மக்கள் மதுபானக்கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடை முன்பு இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu