காரைக்குடியில் சுமைகூலி பிரச்னையால் பொங்கல் தொகுப்பு அனுப்பவதில் சிக்கல்

காரைக்குடியில் சுமைகூலி பிரச்னையால் பொங்கல் தொகுப்பு அனுப்பவதில் சிக்கல்
X

பொங்கல் பரிசு பொருள்களை ஏற்றிச்செல்வதற்காக காத்திருக்கும் லாரிகள்

சுமைதூக்குவோர் பொங்கல் தொகுப்பு பொருள்களை ஏற்றுவதற்கு கேட்ட கூடுதல் கூலியை ஒப்பந்தம் எடுத்தவர்கள் தர மறுத்துவிட்டனர்

காரைக்குடியில் சுமை தூக்குவோர் கூலி பிரச்னை நீடிப்பதன் காரணமாக ரேஷன் கடைகளுக்கு பொங்கல் தொகுப்பு அனுப்பவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 20 விதமான பொங்கல் பொருட்களுடன் கரும்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. பொங்கல் பரிசு தொகுப்பு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி நடந்து வருகிறது.

இந்நிலையில், சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் இருந்து பொங்கல் பரிசு தொகுப்புகளை ஏற்றிச் செல்வதற்கு லாரிகள் வந்தன . சுமைதூக்குவோர் பொங்கல் பரிசு பொருள் ஏற்றுவதற்கு கூலி கூடுதலாக கேட்டதாக கூறப்படுகிறது. அதை ஒப்பந்தம் எடுத்தவர்கள் தர மறுக்கவே சுமை தூக்கும் தொழிலாளர்கள் பொங்கல் பரிசு பொருட்களை லாரியில் ஏற்க மறுத்து விட்டனர். இதனால் காரைக்குடி தாலுகா ரேஷன் கடைகளுக்கு பொங்கல் பரிசு பொருள்கள் அனுப்புவதில் சிக்கில் ஏற்பட்டது. தகவலறிந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்

Tags

Next Story