ஐந்து விளக்கில் தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் பிச்சையெடுக்கும் போராட்டம்

ஐந்து விளக்கில் தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் பிச்சையெடுக்கும் போராட்டம்
X

ஐந்து விளக்கில் தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் நிவாரணம் கோரி நடத்திய பிச்சையெடுக்கும் போராட்டம்.

ஐந்து விளக்கில் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர்.

சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை நகரங்களில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் இயங்கி வருகின்றன.

காரைக்குடியை தலைமையிடமாகக் கொண்டு தனியார் ஓட்டுநர்கள்,மற்றும் தொழிலாளர்கள் நலச் சங்கம் இயங்கி வருகிறது.

இதில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், கொரானா தொற்று ஊரடங்கு உத்தரவால் தமிழகமெங்கும்பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இதனால் வேலை இழந்து சிரமத்திற்கு ஆளான தனியார் போக்குவரத்து ஊழியர்கள் பேருந்து உரிமையாளர்களிடம் உதவியை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

ஒருமுறை போராட்டம் நடத்தியும், பேருந்து உரிமையாளர்களிடமிருந்து உதவி ஏதும் வராததால், இன்று காரைக்குடி 5 விளக்கு அருகே பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!