மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் கூட்டு அறிக்கை:அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்

மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் கூட்டு அறிக்கை:அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்
X
இந்திய பத்திரிக்கைகள் ஊடகங்கள், மட்டுமன்றி, உலக ஊடகங்கள் பாராட்டும் அளவிற்கு மு. க. ஸ்டாலின் நல்லாட்சி செய்து வருகிறார்

மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் அவற்றை திரைபோட்டு மறைப்பதற்காக கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளனர் : ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேச்சு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், கடந்த சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தலின் தொடர்ச்சி தான் இந்த 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலின் முடிவு என்றும், உள்ளாட்சி தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்று தந்த மக்களுக்கு எனது சார்பிலும், முதலமைச்சர் சார்பிலும் நன்றி. அதிமுக நிர்வாகிகள் ஓபிஎஸ்-இபிஎஸ் ஆகியோரின் கூட்டறிக்கை என்பதை மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள், அவற்றை திரைபோட்டு மறைப்பதற்காக வெளியிட்டதாகவே கருதுகிறேன். இந்திய பத்திரிக்கைகள் ஊடகங்கள், பாராட்டுவது மட்டுமன்றி, உலக ஊடகங்கள் பாராட்டும் அளவிற்கு மு. க. ஸ்டாலின் நல்லாட்சி செய்து கொண்டிருக்கிறார். நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில், எதிர்க்கட்சியினரும் ஆளுங்கட்சியினரின் போல முதல்வரின் செயல்பாட்டை ஆதரித்தனர். இரட்டைத் தலைமை, மாறுபட்ட கருத்துகள், கூட்டணியில் பிளவு காரணமாக அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ளது.

அதிமுகவில் இரண்டாம் கட்ட தலைவர்கள் தலைமையின் மீது அதிருப்தியில் இருக்கின்றனர். மக்களிடமும், தொண்டர்களிடமும் செல்வாக்கை அதிமுக இழந்துள்ளது.மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இறப்பில் மர்மம் இருக்கிறது என்று சொன்னவரே ஓ.பன்னீர்செல்வம் தான். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையம் அமைக்க சொன்ன ஓ.பன்னீர்செல்வமே ஆணையம் ஐந்து முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் அதிமுகவுக்கும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும் துரோகம் செய்திருக்கின்றனர் என்பதை அக்கட்சித் தொண்டர்களும் மக்களும் உணர்ந்துள்ளனர் என்றார் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்