விஜயதசமியை முன்னிட்டு பெற்றோர்கள் ஆர்வமுடன் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பு
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நடைபெற்ற வித்யாரம்பம்
விஜயதசமியை முன்னிட்டு மழலை குழந்தைகளை பெற்றோர்கள் ஆர்வமுடன் பள்ளியில் சேர்த்தனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஏராளமான பெற்றோர் தங்களது குழந்தைகளை விஜயதசமி நாளான இன்று பள்ளிகளில் ஆர்வமுடன் சேர்த்தனர். குழதைகளுக்கு ஆசிரியர்கள் நெல்மணியில் "ஓம் " என்ற எழுத்தையும் "அ "என்ற எழுத்தையும் எழுதவைத்தனர். மகாபாரதத்தில் ஆட்சி, அதிகாரம், நாடு உள்பட சகலமானதையும் இழந்த பாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாசம், ஓராண்டு மறைவு வாழ்க்கை முடிந்து, மீண்டும் அனைத்து ஆயுதங்களையும் தாங்கள் இழந்த பலம் ஆகியவற்றையும் விஜயதசமியன்று பெற்றனர் என்று கூறப்படுகிறது.
தமிழகத்தில் விஜயதசமி அன்று, மழலை குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பதற்கும் பாட்டு, இசைக் கருவிகள் பயிற்சி, நடனப் பயிற்சி, பிறமொழிப் பயிற்சி, புதிதாக ஒரு தொழிலைக் கற்றுக்கொள்வது ஆகியவற்றை இந்த நாளில் தொடங்கினால் சரஸ்வதி தேவியின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும் என்பது ஐதீகம்.இதற்கு முந்தைய நாளான நவமியில் சரசுவதியை வணங்கி கல்வி, கலை கருவிகளுக்குப் பூசை நடத்தி விஜயதசமி அன்று தங்கள் குழந்தைகளை முதல்முறையாக பள்ளிகளில் பெற்றோர்கள் சேர்க்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu