குறைகளை கொட்டிய ஊராட்சி தலைவர்கள் : தீர்வுகான அதிகாரிகளிடம் எம்.எல் ஏ வேண்டுகோள்

குறைகளை கொட்டிய ஊராட்சி தலைவர்கள் : தீர்வுகான அதிகாரிகளிடம் எம்.எல் ஏ வேண்டுகோள்
X
ஊராட்சி தலைவர்கள், தங்கள் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மின்சாரம் , சாலை , குடி தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல வருடங்களாக தீர்கப்பட்டாமல் இருக்கிறது என்று புகார்கள் தெரிவித்தனர்

குறைகளை கொட்டி தீர்த்த ஊராட்சி தலைவர்கள்... தீர்வுகான அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்த எம்.எல் ஏ...

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை ஒன்றிய அலுவலகத்தில் தொகுதி எம்எல்ஏ மாங்குடி தலைமையில் அதிமுக ஒன்றிய தலைவர் சரண்யா செந்தில்நாதன் மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள் ஒன்றியகவுன்சிலர்கள், 26 ஊராட்சி தலைவர்கள் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்ட கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பான்மையான ஊராட்சி தலைவர்கள், தங்கள் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மின்சாரம் , சாலை , குடி தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல வருடங்களாக தீர்கப்பட்டாமல் இருக்கிறது என்று அடுக்கடுக்காக புகார்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து பேசிய அதிகாரிகள், புகார்கள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர் . மேலும் அனைவரின் குறைகளையும் கேட்ட தொகுதி எம்.எல்.ஏ மாங்குடி, குறைகளை துறை சார்ந்த அமைச்சர்களிடம் பேசி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் . கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள அதிகாரிகள் ஊராட்சி தலைவர்கள் கூறும் குறைகளை அதிகாரிகள் சரி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்

Tags

Next Story
ai solutions for small business