காரைக்குடியில் குழந்தை தொழிலாளர்கள் தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள பேக்கரியில் குழந்தைத்தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளது குறித்து ஆய்வு செய்த குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள்
காரைக்குடியில் குழந்தை பாதுகாப்பு மாவட்ட அலுவலர் சைமன் தலைமையிலான அதிகாரிகள், இரும்பு பட்டறை, ரஸ்க் தயாரிக்கும் கம்பெனிகள், கடைகளில் குழந்தை தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் கொரானா வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகள் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் மூடி இருந்ததால், பள்ளிகளில் படித்து வந்த ஒரு சிலர் தற்போது படிப்புகளை பாதியில் விட்டுவிட்டு, கடைகளில் வேலைகள் செய்து வருவதாக குழந்தை தொழிலாளர் பாதுகாப்பு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதைத் தொடர்ந்து, இன்று குழந்தை பாதுகாப்பு மாவட்ட அதிகாரி சைமன் தலைமையிலான அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில், 16 வயது மட்டுமே ஆன பத்துக்கும் மேற்பட்ட குழந்தைத் தொழிலாளர்களை பணியில் வைத்திருந்த, தொழிற்சாலை மற்றும் கம்பெனி கடைகளின் உரிமையாளர்களிடம், குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்த கூடாது என்றும், முதல் முறை என்பதால் எச்சரிக்கை விடுத்து அபதாரம் விதித்தனர்.
இந்த ஆய்வில் குழந்தை தொழிலாளர் நல நலத்துறை, சைல்டுலைன், பெண்கள் பாதுகாப்பு அலுவலர்கள், பெண் காவலர்கள் என நான்கு துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu