சிவகங்கை- இறந்த பின்பும் மூன்றரை லட்சம் கேட்பதாக தனியார் மருத்துவமனை மீது புகார்

சிவகங்கை- இறந்த பின்பும் மூன்றரை லட்சம் கேட்பதாக தனியார் மருத்துவமனை மீது புகார்
X

இறந்த பின்பும் மூன்றரை லட்சம் கேட்பதாக தனியார் மருத்துவமனை மீது புகார் தெரிவித்துள்ளனர்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கே.எம்.சி தனியார் மருத்துமனையில் 22 நாள் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட வேணுகோபால் என்பவர் உயிரிழந்துள்ளார்.

சிகிச்சையின் போது 3 லட்சத்து 50 ஆயிரம் லட்சம் பணம் கட்டிய நிலையில் இறந்த பின்பு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் கட்டினால் மட்டுமே இறந்தவர் உடலை தருவோம் என மருத்துவமனை நிர்வாகம் மிரட்டுவதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து காரைக்குடி வடக்கு போலீசார் மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே ஒரு லட்சம் கொடுத்து விட்டு இறந்தவர் உடலை பெற்று செல்ல பேச்சு நடத்தியதாக வேணுகோபால் உறவினர் தெரிவித்துள்ளார்

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!