காரைக்குடி- திறக்கப்படாத கைத்தறி துணி விற்பனை வளாகம்- அமைச்சரிடம் முறையிட முடிவு

காரைக்குடி- திறக்கப்படாத கைத்தறி துணி விற்பனை வளாகம்- அமைச்சரிடம் முறையிட முடிவு
X

காரைக்குடி எம் எல் ஏ மாங்குடி 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பணிகள் முடிவடைந்து ஓராண்டு ஆகியும் திறக்கப்படாத கைத்தறி துணி விற்பனை வளாகம் குறித்து கைத்தறி துறை அமைச்சரிடம் முறையிட பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பணிகள் முடிவடைந்து ஓராண்டு ஆகியும் திறக்கப்படாத கைத்தறி துணி விற்பனை வளாகம் குறித்தும், சாயப்பட்டறை பணிகள் முடிவடையாததால் நெசவாளர்கள் பாதிக்கப்படுவதாகவும் காரைக்குடி எம்எல்ஏ விடம் பொதுமக்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

காரைக்குடி தேவகோட்டை சாலையில் செஞ்சையில் உள்ளது கைத்தறி துணி நூல்துறைக்கு சொந்தமான வளாகம். இங்கு கைத்தறி நூல்களுக்கு சாயம் அமைக்கும் தொழிற்கூடம் 14 கடைகளுடன் கூடிய வணிக வளாகம் கட்டி முடிக்கப்பட்டு ஓர் ஆண்டுக்கு மேல் ஆகியும் திறக்கப்படாததால் செட்டிநாடு கைத்தறி நெசவாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து பல்வேறு முறை முறையிட்டும் அதிகாரிகளும் முந்தைய அரசும் செவிசாய்க்கவில்லை. இது குறித்து தற்போது காரைக்குடி எம் எல் ஏ மாங்குடி கவனத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு உடனடியாக ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ இது குறித்து கைத்தறி துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தார்..

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி