கொலை வழக்கு: காரைக்குடியில் சகோதரிகள் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி

கொலை வழக்கு: காரைக்குடியில் சகோதரிகள் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி
X

தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சசோதரிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

காரைக்குடியில் கொலை வழக்கில் சேர்க்கப்பட்டதால் அவரது மகள்கள் விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கடந்த புதன் கிழமை ராஜ்குமார் என்பவர் அவரது நண்பர்களான வி.சி.க. கட்சியை சேர்ந்த கணேசன் மற்றும் அவரது கூட்டாளி சுந்தரமாணிக்கம் ஆகியோர் மது போதையில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கில் கணேசன், சுந்தர மாணிக்கம் கைது செய்யப்பட்ட நிலையில் கணேசன் மனைவி தேன்மொழி மற்றும் அவரது மகன் நிஷாந்த் ஆகியோரும் குற்றவாளியாக வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். தனது தாயையையும் கொலை வழக்கில் குற்றவாளியாக சேர்த்ததால் அதிர்ச்சியடைந்த அவரது மகள்கள் அஸ்விதா, நிவேதா ஆகிய இருவரும் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

வீட்டில் மயக்கமடைந்து கிடந்த சகோதரிகளை உறவினர்கள் மீட்டு காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிசிச்சைக்கு சேர்த்தனர். விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சகோதரிகளின் உறவினர்கள் காவல் துறை பொய் வழக்கு போட்டுள்ளதாக குற்றம் சாட்டினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!