தமிழகத்தில் கொலை கொள்ளை சம்பவங்கள் குறையவில்லை: இ.கம்யூ.மாநிலசெயலாளர் முத்தரசன்

தமிழகத்தில் கொலை கொள்ளை சம்பவங்கள் குறையவில்லை: இ.கம்யூ.மாநிலசெயலாளர் முத்தரசன்
X

சிவகங்கை மாவட்டம்ஸ காரைக்குடி அருகே சாக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த  இ.கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலர் இரா. முத்தரசன்.

தமிழக அரசு நகர்ப்புற வேலையுறுதித் திட்டத்தை அறிவித்து, அதற்காக ரூ.100 கோடி நிதி ஒதுக்கியதை வரவேற்கிறோம்

தமிழகத்தில் கொலை கொள்ளை சம்பவகங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றது எனவும், பெண்கள் குழந்தைகளுக்கு அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே சாக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடந்த செந்தொண்டர் பயிற்சி முகாம் நிறைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறும் போது தமிழக அரசு நகர்ப்புற வேலையுறுதித் திட்டத்தை அறிவித்து, அதற்காக ரூ.100 கோடி நிதி ஒதுக்கியதை வரவேற்கிறோம். கடந்த 10 ஆண்டுகளில் ஊழலில் தமிழகம் சீரழிந்து விட்டது. அதை மீட்டெடுப்பது சாதாரண விஷயம் இல்லை. ஏனெனில் அதில் தொடர்புடைய பல அதிகாரிகள் இப்போதும் பணியில் இருக்கின்றனர்.அவர்களை உடனடியாக வெளியேற்ற முடியாது. அவர்களையும் சமாளித்து, மீட்டெடுக்கும் முயற்சியிலும் அரசு ஈடுபட்டு வருகிறது.

ஜெயலலிதா சமாதிக்கு போகிறவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பது காவல்துறை கடமை. திமுக ஆட்சி என்பதால் தான் பேரறிவாளனுக்கு தொடர்ந்து பரோல் வழங்கப்பட்டு வருகிறது. எழு பேர் விடுதலை குறித்து தொடர்ந்து வலியுறுத்தி கொண்டு தான் உள்ளோம். .இதில் மத்திய அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் காவல்துறை கடுமையாக நடவடிக்கை எடுத்தாலும், தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அங்கும் இங்கும் என நடந்து கொண்டுதான் இருக்கின்றது . எனவே பெண்கள் குழந்தைகளுக்கு அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறினார்

Tags

Next Story