ரேசனில் பொங்கல் தொகுப்பு வழங்கல்: எம்எல்ஏ மாங்குடி ஆய்வு

ரேசனில் பொங்கல் தொகுப்பு வழங்கல்: எம்எல்ஏ மாங்குடி ஆய்வு
X

ரேசன் கடையில் பொங்கல் தொகுப்பினை பயனாளிகளுக்கு வழங்கிய காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி.

காரைக்குடி அருகே, ரேசன் கடையில் பொங்கல் தொகுப்பு முறையாக வழங்கப்படுகிறதா என, சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி ஆய்வு செய்தார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள பருப்பு ஊரணி, முத்து ஊரணி, கழனிவாசல், மீனாட்சிபுரம், அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில், விலையில்லா பொங்கல் தொகுப்பினை காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி வழங்கினார்.

அதன்பின்பு, நியாயவிலை கடைகளில் பொங்கல் தொகுப்பு முறையாக வழங்கப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டார். அப்போது முத்து ஊரணியில் உள்ள ரேஷன் கடையில், முறையாக எண்ணெய் பருப்பு வழங்கவில்லை என, அப்பகுதி பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினரிடம் புகார் கூறினர்.

இதனை தொடர்ந்து, கடை விற்பனையாளரிடம் அழைத்து முறையாக பொருட்கள் அனைத்தும் வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், கடை பொறுப்பாளர்களிடம் விசாரணை நடத்தி ரேஷன் பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார்.

Tags

Next Story