காரைக்குடியில் அனைவரும் தடுப்பூசி போட வழியுறுத்தி மினி மாரத்தான் போட்டி

காரைக்குடியில் அனைவரும் தடுப்பூசி போட வழியுறுத்தி மினி மாரத்தான் போட்டி
X

வெற்றி பெற்றவர்களை பராட்டி பரிசுகளை வழங்கிய ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன், தொகுதி எம்.எல்.ஏ மாங்குடி ஆகியோர்.

காரைக்குடியில் அனைவரும் தடுப்பூசி போட வழியுறுத்தி மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தனியார் மருத்துவமனை சார்பில் கொரானாவை வெல்வோம் தடுப்பு ஊசி அனைவரும் போடுவோம் என்பதை வழியுறுத்தி மாணவர்கள் இளைஞர்கள், மாணவிகள், பெண்கள் என முன்று பிரிவுகளில் மாரத்தான் போட்டி நகரின் முக்கிய வீதிகளில் வழிகளாக நடந்தது.

5.5 கிலோ மீட்டர் தூரம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதில் இளைஞர்கள்இளம் பெண்கள்40 வயதுக்கு மேல் உள்ளவர்கள் என ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர். மூன்று பிரிவுகளாக நடந்த மாரத்தான் போட்டியில் இளைஞர்கள் பிரிவில் செல்வராஜ் என்பவரும், 40 வயதினர் பிரிவில் முத்துவிநாயகம், இளம் பெண்கள் பிரிவில் ஐஸ்வர்யா ஆகியோர் முதல் பரிசு பெற்றனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை, பதக்கம், சான்றிதழை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் , தொகுதி எம்.எல்.ஏ மாங்குடி ஆகியோர் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களை பராட்டி பரிசுகளை வழங்கினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!