காரைக்குடி அருகே தடையை மீறி மஞ்சுவிரட்டு: 20 பேர் காயம்
கல்லல், இந்திரா நகர் பகுதியில் உள்ள கண்மாய் பகுதியில் தடையை மீறி மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கல்லல் நகரில் அருள்மிகு ஸ்ரீ சௌந்தரநாயகி அம்மன் சமேத ஸ்ரீ சோமசுந்தரேஸ்வரர் சுவாமி திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. அதனை தொடர்ந்து இன்று கல்லலில் மஞ்சு விரட்டு நடைபெறும் என இனைய வழியில் இளைஞர்கள் தகவல்களை பரப்பி இருந்தனர்.
கல்லல் காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி இந்திரா நகர் பகுதியில் உள்ள கண்மாய் பகுதியில் சரக்கு வாகனத்தில் மஞ்சு விரட்டு காளைகள் கொண்டு வந்து அவிழ்த்து விட்டனர். இதில் 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. சீறி பாய்ந்த காளைகள் முட்டியதில் 20 பேருக்கு காயம் ஏற்பட்டது.
மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியை கான சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பெண்கள், குழந்தைகள் சரக்கு வாகனத்தில் அமர்ந்து மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர். இருந்தாலும் கொரோனா கட்டுபாடுகள் இருப்பதால் தடையை மீறி மஞ்சுவிரட்டு நடத்தியவர்கள் குறித்து கல்லல் போலீசார் விசாரனை செய்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu