தடுப்பணை கட்டாமல் பண மோசடி: ஊராட்சி செயலாளர் மீது குற்றச்சாட்டு

தடுப்பணை கட்டாமல் பண மோசடி: ஊராட்சி செயலாளர் மீது குற்றச்சாட்டு
X

ஊராட்சி மன்ற அலுவலகம் 

தடுப்பணை கட்டாமல் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பலபேர் பெயரில் பணம் எடுத்து மோசடி செய்த ஊராட்சி செயலாளர் மீது குற்றச்சாட்டு

சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே உள்ள பனங்குடி கிராமத்தில் 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலனோர் விவசாய பெருமக்கள். இந்த ஊரிலுள்ள வீரையன் (வீரந்தன்) கண்மாய்க்கு வரும் வரத்து கால்வாயில் மண் அரிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக தடுப்பணை கட்டுவதற்க்காக 4 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஊராட்சி செயலாளர் முத்துராமன் என்ற ரவி தடுப்பணை கட்டாமல் செயலருக்கு நெருக்கமான பிரபு, ராஜா, தவசு ஆகியோர்களின் பெயர்களில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் பணம் பெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சித்தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருக்கு புகார் அளித்தும் அதிகாரிகள் இதுவரை வந்து தடுப்பணை குறித்து ஆய்வு செய்யவில்லை என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் தடுப்பனை கட்டாமலேயே பணம் எடுக்கும் ஊராட்சி செயலாளர் பணங்குடி கிராம ஊராட்சி செயலாளராக 21 ஆண்டு காலமாக பணிபுரிந்து கொண்டு பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து ஊராட்சி செயலாளர் முத்துராமன் என்ற ரவியிடம் கேட்டபொழுது தடுப்பணை கட்டும் பணி விரைந்து முடிக்கப்படும் என்றும் தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் தெரிவித்தார்.

Tags

Next Story