ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை ஏற்படுத்தி கொண்ட காரைக்குடி மக்கள்

ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை ஏற்படுத்தி கொண்ட காரைக்குடி மக்கள்
X
ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை ஏற்படுத்தி கொண்ட காரைக்குடி மக்கள்

கொரோனா தொற்று இரண்டாம் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு 10 ம் தேதி முதல் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியே செல்லலாம் என்று அறிவித்துள்ள நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தமிழக அரசு அறிவித்த ஊரடங்கு கட்டுபாடுகளை காற்றி பறக்க விட்டு தங்கள் இஷ்டத்திற்கு இரு, நான்கு, சக்கர வாகனங்களிலும் அதிக அளவில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

மேலும் தடையில் உள்ள சரக்கு லாரிகளும் சாலைகளில் வழக்கம் போல செல்கிறது. அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து ஆட்டோகளும் அதிக அளவில் இயங்கு றது. எந்த பகுதியிலும் போலீசார் சோதனையில் ஈடுபடவில்லை. இதனால் தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு காரைக்குடியில் பயனற்றதாகி விட்டது என்றே கூறலாம்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!