தமிழகத்திலேயே அதிக மாணவர்கள் சேர்ந்துள்ள காரைக்குடி நகராட்சி தொடக்கப் பள்ளியில்,

தமிழகத்திலேயே அதிக மாணவர்கள் சேர்ந்துள்ள காரைக்குடி நகராட்சி தொடக்கப் பள்ளியில்,
X
தமிழகத்திலேயே அதிக மாணவர்கள் சேர்ந்துள்ள காரைக்குடி நகராட்சி தொடக்கப் பள்ளியில் கூடுதல் கட்டிடம் கட்ட இடவசதி குறித்து எம்எல்ஏ ஆய்வு

தமிழகத்திலேயே அதிக மாணவர்கள் சேர்ந்துள்ள பள்ளி என்ற பெருமையை சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகராட்சி தொடக்கப் பள்ளி பெற்றுள்ளது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி டி. டி. நகர் பகுதியில் இராமநாதன் செட்டியார் நகராட்சி அரசு தொடக்க பள்ளி இயங்கி வருகிறது.கடந்த 40 வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இப்பள்ளி முதலில் தொடக்கப்பள்ளி, பின்னர் நடு நிலைப்பள்ளியாக தரம் உயர்ந்து. தற்போது உயர்நிலைப்பள்ளி என்றநிலைக்கு தரம் உயர்ந்துள்ளது.

இந்நிலையில், தொடக்கப் பள்ளிக்கு என தனி இடம் ஒதுக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் தரம் உயர்ந்துள்ளதால், அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை இப்பள்ளியில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக தமிழகத்திலேயே அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் சேர்ந்துள்ள பள்ளி என்ற பெருமையை இப்பள்ளி பெற்றுள்ளது. எனவே தொடக்கப் பள்ளி வளாகத்தில் இருக்கும் காலி இடத்தில், கூடுதல் கட்டிடம் கட்டித்தர இப்பள்ளியின் ஆசிரியர்கள் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடியிடம் கோரிக்கை வைத்தனர்.

ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று,காரைக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, இன்று, பள்ளிக்கு நேரில் சென்று அந்க வளாகத்தில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு தேவையான இட வசதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags

Next Story
ai solutions for small business