காரைக்குடி அரசு மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

காரைக்குடி அரசு மருத்துவமனை  ஒப்பந்த ஊழியர்கள் உள்ளிருப்பு  போராட்டம்
X

காரைக்குடி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் தனியார் நிறுவன ஒப்பந்த ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்.

கடந்த கொரோனா இரண்டாவது அலையில் பணியாற்றவர்களுக்கு அரசு வழங்கிய ஊக்கத்தொகை இந்த தனியார் நிறுவனம் வழங்காததைக் கண்டித்து போராட்டம்

காரைக்குடி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் தனியார் நிறுவன ஒப்பந்த ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சுமார் 50க்கும் மேற்பட்ட சுமித் என்ற தனியார் நிறுவன ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் மருத்துவமனையின் எலக்ட்ரிஷியன், பிளம்பர், காவலாளி,சலவைத் தொழிலாளி, சமையல், துப்புரவு வேலை ,செவிலியர் உதவியாளர்கள் என அனைத்து வேலைகளும் இந்த ஒப்பந்த தொழிலாளர்களே செய்து வருகின்றனர்.

கடந்த கொரோனா இரண்டாவது அலையின்போது பணி புரிந்தவர்களுக்கு அரசு ஊக்கத்தொகை வழங்கிய நிலையில் , இந்த ஊக்கத் தொகையை தனியார் நிறுவனம் பெற்றுக்கொண்டு மருத்துவமனையில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு வழங்கவில்லையாம். இதனை கண்டித்து. உடனடியாக அரசு அறிவித்த ஊக்கத் தொகையை எங்களுக்கு வழங்க வேண்டும் என சுமார் 50க்கும் மேற்பட்ட தனியார் நிறுவன ஒப்பந்த ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் மருத்துவமனையின் மருத்துவ சிகிச்சையை தவிர அனைத்து பணிகளும் முடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story