காரைக்குடி மருத்துவமனைக்கு 13 ஆக்சிசன் செறிவூட்டிகள் சமூக ஆர்வலர்கள் வழங்கல்

காரைக்குடி மருத்துவமனைக்கு  13 ஆக்சிசன் செறிவூட்டிகள் சமூக ஆர்வலர்கள் வழங்கல்
X
காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு சமூகஆர்வலர்கள் 13 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கினர்.

காரைக்குடி தாலுகா அலுவலகத்தில், தேவகோட்டை கோட்டாட்சியர் அ.வே.சுரேந்திரன் அவர்கள் தலைமையில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அருண் அவர்கள் முன்னிலையில் காரைக்குடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் தர்மர் அவர்களிடம் 13 ஆக்சிசன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டன.

எஸ்.ஏ.எம் செராமிக்ஸ் நிறுவனத்தார் 2,, ரத்தினம் டிரஸ்ட் சேவுகன் செட்டியார் 2,, ஸ்டீல் ஜெயண்ட் இஞ்சினியரிங் சிங்கப்பூர் 1,, எம்.எஸ்.செந்தில் லவ்லி கார்ட்ஸ் மற்றும் நண்பர்கள் 1,, காரைக்குடி அகில இந்திய கட்டுனர் சங்கம் 1, அழகப்பா பொறியியல் கல்லூரி 2003ஆம் ஆண்டு முன்னாள் மாணவர்கள் 1, வெற்றியூர் உமா குடும்பத்தார் 1, மக்கள் மன்றத்தினர் 4 என ரூ11லட்சம் மதிப்பிலான மொத்தம் 13 செறிவூட்டிகள் வழங்கப்பட்டன. தமிழக மக்கள் மன்றத்தின் தலைவர் ச.மீ.இராசகுமார் ஒருங்கிணைப்பில் இந்நிகழ்வு நடைபெற்றது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!