காரைக்குடி அருகே காரில் சிக்கிய ரூ.5. கோடி 20 லட்சம் குறித்து 6 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

காரைக்குடி அருகே காரில் சிக்கிய ரூ.5. கோடி 20 லட்சம் குறித்து 6 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது
X

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வடக்கு காவல்நிலையத்தில் காரில் ரூ.5.20 கோடி எடுத்து வந்த 6பேரிடம் விசாரணை நடத்திய போலீஸார் 

சேலம் பகுதியில் இருந்து வந்த 2 கார்களை சோதனையிட்டபோது, ஒரு காரில் ரூ. 5. 20 கோடி இருந்தது தெரியவந்தது.

காரைக்குடி அருகே காரில் சிக்கிய ரூ.5. 20 கோடி குறித்து 6 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே குன்றக்குடியில் மதுரை - தேவகோட்டை தேசிய நெடுஞ்சாலையில் காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சேலம் பகுதியில் இருந்து வந்த 2 கார்களை சோதனையிட்டனர். அதில் ஒரு காரில் ரூ. 5 .20 கோடி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து இரண்டு கார்களில் வந்த 6 பேரையும் ,காரைக்குடி வடக்கு காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.


அவர்களிடம் டி.எஸ்.பி., வினோஜி விசாரணை நடத்தினார். விசாரணையில் சேலத்தை சேர்ந்த ராஜ்குமார் (43), சென்னை சூரியா கிஷோர், சேலம் மணிகண்டன், கோவை, சண்முக ஆனந்த், குமார், திருச்சி காமராஜ் (வழக்கறிஞர்) ஆகியோர் எனவும், அவர்கள் ரெடிமிக்ஸ் கான்கீரிட் தொழிற்சாலை அமைப்பதற்காக நிலம் வாங்க வந்ததாகவும் தெரிய வந்தது. இது தொடர்பாக, காரைக்குடி வருமானவரி துறை அதிகாரி மகேஸ்வரிக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், அவர்கள் பணத்தை கைப்பற்றி, காரில் வந்த 6 பேரிடமும் வருமானவரி துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!