/* */

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி குழாய் சேதம்: குடிநீர் வீணாகும் அவலம்

குழாய் சேதமடைந்ததால் குடிதண்ணீர் கடந்த 4 நாட்களுக்காக வெளியேறி வீணாவதாக மக்கள் புகார்

HIGHLIGHTS

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி குழாய் சேதம்:  குடிநீர்  வீணாகும் அவலம்
X

தேவகோட்டை அருகே கல்லுப்பட்டி கிராமத்தில் உள்ள தண்ணீர் தொட்டி

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே கல்லுப்பட்டி கிராமத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் இருந்து பூமிக்கடியில் செல்லும் குடிநீர் குழாய் உடைந்து, தண்ணீர் வீணாவதைத் தடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே அமைந்துள்ளது கல்லுப்பட்டி ஊராட்சியில் மக்களின் குடிநீர்த் தேவைக்காக மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி அமைக்கப்பட்டது. இங்கிருந்து பூமிக்கடியில் குழாய் பதிக்கப்பட்டு சுற்றுப்புற கிராமங்களுக்கு குடி தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.



இந்நிலையில், குடிநீர்த்தொட்டிக்கு கீழே பதிக்கப்பட்ட ஒரு குழாய் சேதமடைந்து தண்ணீர் வெளியேறி வீணாக சாலைகளில் ஓடுகிறது. கடந்த 4 நாட்களுக்கு மேலாக தண்ணீர் வீணாகி வருவது குறித்து, ஊராட்சி மன்ற தலைவரிடம் புகார் அளித்தும் .இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். குழாயை உடனடியாக சரி செய்து குடிநீர் வீணாகாமல் தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, கல்லல் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டபோது, உடனடியாக குடிநீர் குழாய் உடைப்பு சரி செய்யப்படும் என்று தெரிவித்தார்.

Updated On: 5 Sep 2021 1:03 PM GMT

Related News

Latest News

  1. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  6. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
  10. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம்