தேவகோட்டையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி உறுப்பினர் சேர்க்கை

தேவகோட்டையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி  உறுப்பினர் சேர்க்கை
X
தேவகோட்டையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் இந்தியயூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் புதிய உறுப்பினர் சேர்க்கை நடந்தது.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை காந்தி ரோடு பள்ளி வாசலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பாக உறுப்பினர் சேர்க்கும் முகாம் நடைபெற்றது. கட்சியின் மாநில துணைத்தலைவர் நவாஸ்கனி எம் பி. புதியதாக சேர்க்கப்பட்ட உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையை வழங்கி நிகழ்ச்சியை துவங்கிவைத்தார்.

இதில் சுமார் 70 உறுப்பினர்களுக்கு கட்சியின் அடையாள அட்டை வழங்கப்பட்டது. மேலும் மாவட்டத்தில் அதிகமான உறுப்பினர்களை இணைக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார். கட்சியின் கோட்பாடு சாராம்சங்களை மக்களிடம் ஏற்படுத்தி புதிய உறுப்பினர்களை இணைக்க அவர் கேட்டுக்கொண்டார்.

இதில் மாவட்டதலைவர் ஹைதர் அலி அம்பலம் வரவேற்புரையாற்றினார். மாநில ஊடகத்துறை செயலாளர் பரக்கத்அலி, மாவட்ட செயலாளர் இயைத்துல்லாஹ், பொருளாளர் பிலால்,மாவட்ட இளைஞரணி முகம்மதுஅக்ரம், மாவட்ட வழக்கறிஞர் அணி அப்துல்கபூர், தேவகோட்டை நகர தலைவர் முகமது காசிம், நகர இளைஞரணி சபிக்ரஹ்மான், அப்துல்ஐக்பார்,மற்றும் ராமநாதபுரம், திருப்பத்தூர், காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!