நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களை நடத்த அரசு தயாராக உள்ளது: அமைச்சர் தகவல்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களை நடத்த அரசு தயாராக உள்ளது: அமைச்சர் தகவல்
X

அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்

தேர்தல் நடத்துவதற்கான அத்தனை நடவடிக்கைகளுக்கும் தமிழக அரசு ஒத்துழைப்பை கொடுத்துக் கொண்டிருக்கிறது

ஊரக, நகர்ப்புற தேர்தல்களை நடத்த தமிழக அரசு தயாராக உள்ளதாக .ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் மேலும் கூறியதாவது: ஊரக நகர்ப்புற தேர்தலை நடத்த வேண்டியது தமிழக தேர்தல் ஆணையம். தான்.தேர்தல் நடத்துவதற்கான அத்தனை நடவடிக்கைகளுக்கும் தமிழக அரசு ஒத்துழைப்பை கொடுத்துக் கொண்டிருக்கிறது. புதிய வகை கொரோனா நோய் தொற்று பரவாமலிருக்க மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும். தமிழக அரசு அறிவுறுத்தியுள்ள கட்டுப்பாடுகளை மக்கள் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்றார் அவர். .

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!