காரைக்குடியில் யானை தந்தத்திலான பொருட்கள் பறிமுதல்

காரைக்குடியில் யானை தந்தத்திலான பொருட்கள் பறிமுதல்
X

காரைக்குடி அருகே கைப்பற்றப்பட்ட தந்ததிலாலான கலைப்பொருட்கள்

காரைக்குடியில் பல லட்சம் பெறுமானமுள்ள யானை தந்தத்திலான பொருட்கள் பறிமுதல் செய்து வனத்துறையினர் நடவடிக்கை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 20ற்கும் மேற்பட்ட பழங்கால கலைப் பொருட்கள் விற்பனை கடைகள் உள்ளன.இக்கடைகளில் யானைத் தந்தத்தால் ஆன, வன உயிரினங்களின் உறுப்புகளைக் கொண்டு செய்யப்பட்ட பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக சென்னை வன நுண்ணறிவு மற்றும் புலனாய்வு உதவி வன பாதுகாவலருக்கு புகார் வந்தது.

புகாரின் அடிப்படையில் இன்று காரைக்குடி பகுதி உதவி வன பாதுகாவலர் மணிவண்ணன் துணையோடு பழங்கால கலை பொருட்கள் கடைகளில் திடீர் சோதனை நடத்தப்பட்டது.இந்த சோதனையில் யானை தந்தத்தால் செய்யப்பட்ட எழுத்தாணி, விளையாட்டு பொம்மைகள், தாயக் கட்டைகள், குங்குமச்சிமிழ், மற்றும் மான் கொம்பு, புலி பல் உட்பட பல பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கலாம் என கருதப்படும் நிலையில்,பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் சிவகங்கையில் உள்ள மாவட்ட வன அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, விசாரணைக்காக கலைப்பொருள் வியாபாரி அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!