முகக் கவசம் இல்லாமல் மீன்பிடி திருவிழா: கொரானா தொற்று பரவும் அபாயம்

முகக் கவசம் இல்லாமல் மீன்பிடி திருவிழா: கொரானா தொற்று பரவும் அபாயம்
X

கல்லல் அருகே மீன்பிடித் திருவிழாவிற்காக கண்மாயில் கிராம மக்கள் முகக்கவசம் இன்றி அதிக அளவில் கூடினர்

கல்லல் அருகே மீன்பிடித் திருவிழாவிற்காக கண்மாயில் கிராம மக்கள் முகக்கவசம் இன்றி அதிக அளவில் கூடியதால், மீண்டும் கொரானா தொற்று பரவும் அபாயம்

சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே விளாரிபட்டி கிராமத்திற்கு சொந்தமான கண்மாயில், ஆண்டுதோறும் ஜூலை மாதம் மீன்பிடி திருவிழா நடைபெறும். ஏப்ரல், மே, ஜீன் மாதங்கள் முழுவதும் கிராம கண்மாய்களில் ஏலத்தின் மூலம் மீன் பிடிக்க தனியாருக்கு குத்தகைக்கு விடப்படும். ஏலத் தேதி முடிவடைந்தவுடன் கிராம மக்கள் மீன்பிடித் திருவிழா நடத்தி கண்மாயில் மீதம் உள்ள மீன்களை பிடித்து செல்வார்கள்.

சென்ற ஆண்டு கொரானா தொற்று பரவல் அதிகமாக இருந்ததால் சிவகங்கை மாவட்ட கிராமங்களில், ஒரு சில கிராமங்களைத் தவிர,பெரும்பாலான கிராமங்களில் மீன்பிடி திருவிழா நடைபெறவில்லை. தற்போது கொரானா தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு உத்தரவில் பல தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில்,இன்று கல்லல் அருகே உள்ள விளாரிபட்டி கிராம கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சுற்று வட்டார கிராமங்களில் இருந்து அதிக மக்கள் முகக் கவசம் இன்றி கூடியதாலும், சமூக இடைவெளி கேள்விக்குறியானதாலும். கொரானா தொற்று குறைந்துவரும் நிலையில், மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளது, எனவே இது போன்ற சமூக இடைவெளியை மறக்கும் நிகழ்ச்சிகளுக்கு அரசு தடை விதித்து, தீவிரமாக கண்காணிக்க வேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!