காரைக்குடியில் வெடி தயாரிக்கும் இடத்தில் விபத்து: கட்டடம் தரைமட்டம்

காரைக்குடியில் வெடி தயாரிக்கும் இடத்தில் விபத்து: கட்டடம் தரைமட்டம்
X

வெடி விபத்தில் தரைமட்டமான கட்டடம். 

காரைக்குடி அருகே, வாணவேடிக்கை வெடி தயாரிக்கும் கட்டிடத்தில் வெடித்து விபத்தில், கட்டடம் முழுவதும் இடிந்து சேதமடைந்தது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ளது இலுப்பக்குடி புதுக்குடியிருப்பு. இங்கு வசித்து வரும் ஆண்டியப்பன் என்பவர் தனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலப்பரப்பில் 3 கட்டிடங்கள் உள்ளன. இதில், ஒரு கட்டிடத்தில், 20 வருடங்களுக்கு மேலாக வாணவேடிக்கை வெடி தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார்.

மற்றொரு கட்டிடத்தில் காவல்துறையினர், தீபாவளி சமயங்களில் காரைக்குடி, சாக்கோட்டை சரகத்தில் அனுமதியின்றி முறைகேடாக விற்கப்பட்ட வெடிகளை பறிமுதல் செய்து, வழக்கு நிலுவையில் உள்ளதால், அங்கு சேமித்து வைத்துள்ளனர்.

இந்நிலையில், வெடி வைக்கப்பட்டிருந்த கட்டிடத்தில் திடீரென இன்று மதியம் 3 மணி அளவில் திடீரென பட்டாசு வெடித்து தீ விபத்து ஏற்பட்டது..அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில், காரைக்குடி தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். வெடி வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் கட்டிடம் முழுவதும் இடிந்து சேதமானது.

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தீ விபத்து நடந்த கட்டிடத்தின் அருகில் யாரும் இல்லாததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!