பஸ் ஸ்டாப்பில் ஆக்கிரமிப்பு கடையை அகற்ற காரைக்குடி எம்.எல்.ஏ. நடவடிக்கை

பஸ் ஸ்டாப்பில் ஆக்கிரமிப்பு கடையை  அகற்ற காரைக்குடி எம்.எல்.ஏ. நடவடிக்கை
X

காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனை பேருந்துநிறுத்தத்தில்,  ஆக்கிரமிப்பு  கடையை உடனடியாக அகற்ற உத்தரவிட்ட, எம்.எல்.ஏ. மாங்குடி.

காரைக்குடி பேருந்து நிறுத்தத்தில் ஆக்கிரமிப்பு கடையை அகற்ற, காரைக்குடி எம்.எல்.ஏ. மாங்குடி நடவடிக்கை மேற்கொண்டார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் இன்று, பி.எம் கேர் பிராணவாயு உற்பத்தி மையத்தை, காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி துவக்கி வைத்தார்.

அதன் பின்பு, மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த எம்.எல்.ஏ., அங்குள்ள பேருந்து நிறுத்தத்தை ஆக்கிரமிப்பு செய்து பெட்டிக்கடை மற்றும் உணவகம் நடத்தப்பட்டு வருவதை கண்டார். அங்கு சென்ற எம்.எல்.ஏ. மாங்குடி, உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டுக்காக உள்ள பேருந்து நிறுத்தத்தில் இருக்கும் கடையை அகற்ற வேண்டும் என்றும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்காகத்தான் பேருந்து நிறுத்தம் உள்ளதாகவும் அறிவுறுத்தினார். இதையடுத்து, அங்கிருந்த கடை அகற்றப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!