கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு மருத்துவர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு மருத்துவர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது
X
கல்லூரி மாணவி அளித்த புகாரில் காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் மருத்துவரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர்

மருத்துவம் பார்க்க வந்த பெண்ணின் மகளான கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பிரபல மருத்துவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ஆறுமுகம் நகர் பகுதியைச் சேர்ந்த 40 வயது பெண் காரைக்குடியில் உள்ள பிரபல எலும்பு முறிவு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.அப்போது அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் அந்தப்பெண்ணுக்கு போதை ஊசி செலுத்தி பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளார். இதில் பழக்கம் ஏற்பட்டு மருத்துவர் அடிக்கடி அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று அந்தப் பெண்ணின் வீட்டிற்கு சென்ற மருத்துவர் அங்கிருந்த, பெண்ணின் மகளான 17 வயது கல்லூரி மாணவியிடம் பாலியல் தொந்தரவு செய்ய முயற்சித்துள்ளார். இதுகுறித்து கல்லூரி மாணவி காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மருத்துவரை போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!