அதிமுகவில் சசிகலாவை இணைப்பது குறித்து கருத்துக்கூற விரும்பவில்லை:ஆர்.பி.உதயகுமார்

அதிமுகவில் சசிகலாவை  இணைப்பது குறித்து  கருத்துக்கூற விரும்பவில்லை:ஆர்.பி.உதயகுமார்
X

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு கச்சத்தீவை காங்கிரஸ் இலங்கைக்கு தாரை வார்த்ததுதான் காரணம்

அதிமுகவில் சசிகலாவை இணைப்பது குறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை என்றார் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் அதிமுக உட்கட்சி அமைப்பு தேர்தல் பார்வையாளராக வந்த முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்த போது மேலும் அவர் கூறியதாவது: பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு போன்ற பொய் பிரசாரங்கள் செய்து திமுக ஆட்சிக்கு வந்துள்ளது என்றும், பொய் சொல்லுவது என்பது திமுகவிற்கு கைவந்த கலை.50 கோடி செலவழித்தாலும் உள்ளாட்சி தேர்தல்களில் அதிமுக வெற்றி பெறப் போவதில்லை என்ற அதிமுக முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் கருத்துக்கு தான் கருத்து சொல்ல முடியாது.அவர் மூத்த சட்ட அமைச்சர். ஓமைக்ரான் தொற்றை தடுக்க மத்திய அரசு அழுத்தம் கொடுத்தாலும், திமுக அரசு நடவடிக்கை எடுக்காமல், மக்களை திசை திருப்புவதிலேயே கவனம் செலுத்தி வருகிறது.

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு காரணம் காங்கிரஸ் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததுதான். இதனைத் தடுக்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெரும் முயற்சி எடுத்தார் என்றார் ஆர். பி. உதயகுமார்.


Tags

Next Story
ai as the future