உள்ளாட்சி தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும்: ப சிதம்பரம்

எல்லா வகையிலும் மக்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய ஆட்சியை மு.க.ஸடாலின் நடத்திக் கொண்டிருப்பதாக ப.சிதம்பரம் தெரிவித்தார்

உள்ளாட்சித்தேர்தல் நடைபெறவுள்ள 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் எஙகளது திமுக-காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றார் முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் செய்தியாளர்களிடம் முன்னாள் நிதிஅமைச்சர் ப சிதம்பரம் மேலும் அவர் கூறியதாவது: எல்லா வகையிலும் மக்களுக்கு மகிழ்ச்சிதரக்கூடிய ஆட்சியை தந்து கொண்டிருக்கிறார் மு.க.ஸடாலின்.இது தொடர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.குடியுரிமை சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய கோரி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறறப்பட்டுள்ளதை வரவேற்கின்றேன்.

கோடநாட்டில குற்றம் நடைபெற்றது உண்மை. அதனைக் கண்டுபிடித்து உண்மை குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும். தமிழுக அரசின் திட்டத்தால் மக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர். இது வரும் உள்ளாட்சி தேர்தலில வெளிப்படும். மத்திய அரசு யாரோடும் கலந்தாலோசிக்காமல், பொதுத்துறைக்கு மூடுவிழா நடத்த முடிவு செய்துள்ளதை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கின்றது.

ஆக்ஸிஸன் பற்றாக்குறையே இல்லை என மத்திய அரசு மக்களின் காதில் பூச்சுற்றும் செயல். திருப்பத்தூர் தொகுதியில் வேளாண் கல்லூரி, காரைக்குடி தொகுதியில் சட்டக்கல்லூரியும் அமைக்கப்படும் என அறிவித்துள்ள முதலமைச்சருக்கு நன்றி பாராட்டுகிறேன்.காரைக்குடி அழகப்பா பல்கலைகழகத்திற்கு உடனடியாக புதிய துணைவேந்தரை நியமிக்க வேண்டும். இது தொடர்பாக, உயர்கல்வித துறை அமைச்சரை நேரில் சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்தார் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம்.


Tags

Next Story
ai marketing future