மூதாட்டிக்கு ஓய்வூதியம் தர மறுப்பு: வங்கி முன் துப்புரவு தாெழிலாளர்கள் போராட்டம்

மூதாட்டிக்கு ஓய்வூதியம் தர மறுப்பு: வங்கி முன் துப்புரவு தாெழிலாளர்கள் போராட்டம்
X

காரைக்குடியில் மூதாட்டிக்கு ஓய்வூதியம் தர மறுத்ததால் வங்கி முன் துப்புரவு தாெழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.

காரைக்குடி கீழஊரணியைச் சேர்ந்தவர் காளிமுத்து. இவர் நகராட்சி துப்புரவு பணியாளராக பணிபுரிந்தார். கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தநிலையில் அவரது மனைவி சிகப்பிக்கு (75) குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. அவர் சுப்பிரமணியபுரம் 1-வது வீதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையில் ஓய்வூதியம் பெற்று வருகிறார்.

இந்நிலையில் ஓய்வூதியம் பெறுபவர் சிகப்பி தான் என்பதில் சந்தேகம் இருப்பதாக கூறி ஜூலை மாதத்திற்குரிய ஓய்வூதியத்தை வங்கி அதிகாரிகள் வழங்க மறுத்துவிட்டனர். பலமுறை வலியுறுத்தி ஓய்வூதியம் வழங்கவில்லை. இதை கண்டித்து ஏஐடியுசி பொறுப்பாளர் ராமச்சந்திரன் தலைமையில் துப்புரவுத் தொழிலாளர்கள் வங்கி வாயிலில் மூதாட்டியை படுக்க வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தால் வாடிக்கையாளர்கள் வங்கிக்குள் வந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து வங்கி முதன்மை மேலாளர் சுவாமிநாதன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பின் மூதாட்டிக்கு ஓய்வூயம் வழங்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.

Tags

Next Story