மஞ்சுவிரட்டு- மாட்டு வண்டி பந்தயத்திற்கு அனுமதி மறுப்பு: கவுதமன் கண்டனம்

மஞ்சுவிரட்டு- மாட்டு வண்டி பந்தயத்திற்கு அனுமதி மறுப்பு:  கவுதமன் கண்டனம்
X

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்ப்பேரரசு கட்சியின் பொதுச்செயலர் கௌதமன்

மஞ்சுவிரட்டு, வடமாடு, மாட்டு வண்டி பந்தயம் உள்ளிட்ட எல்லா விளையாட்டு களையும் தமிழக அரசு திட்டமிட்டு முடக்குகிறது

மஞ்சுவிரட்டு மாட்டு வண்டி பந்தயத்திற்கு அனுமதி மறுப்பது தமிழக அரசின் வன்முறை என்றார் காரைக்குடியில் தமிழ்ப்பேரரசு கட்சியின் பொதுச்செயலர் கவுதமன்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் கவுதமன் கூறியதாவது : ஜல்லிக்கட்டுக்கு எதிரான நடந்த புரட்சியை அடுத்து அதற்கு உரிமை மீட்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அதை மையமாக வைத்து நடத்தப்பட்ட மஞ்சுவிரட்டு, வடமாடு, மாட்டு வண்டி பந்தயம் உள்ளிட்ட எல்லா விளையாட்டு களையும் தமிழக அரசு திட்டமிட்டு முடக்குகிறது. மீறி நடத்தினால் அவர்கள் மீது வழக்கு போடுவது அரச வன்முறை ஆகும்

எனவே, ஜல்லிக்கட்டுக்கு என்ன வரைமுறையில், பாதுகாப்பு கொடுக்கப்படுகிறதோ, அதே போல 3 ஆயிரம் ஆண்டு பழமையான சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளில் நடத்தப்படும் விளையாட்டுகளுக்கு உடனடியாக அனுமதிக்க வேண்டும். வழக்கு போடக்கூடாது. மீறி வழக்கு போட்டு தடுத்தால் உரிமை மீட்பு போராட்டத்தை நாங்கள் நடத்துவோம் எங்கள் நாட்டு மாடுகளுக்கு எங்கள் நாட்டு மாட்டின் சினை ஊசி போடாமல், வெளிநாட்டிலிருந்து கொண்டு வந்த ஜெர்சி சினை ஊசியை செலுத்தி, கலப்பினமாக விஷமுள்ள தன்மையாக மாற்றுவதை நாங்கள் ஏற்று கொள்ள மாட்டோம். 80 சதவீதம் அத்துமீறி எங்கள் மாட்டின் தனிதன்மை மீது திணிக்கின்ற இந்த அத்து மீறலை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையேல் அதற்காகவும் நாங்கள் போராட்டத்தை கையில் எடுப்போம் என்றார் கௌதமன்

Tags

Next Story
சும்மா விராட் கோலி மாதிரி ஃபிட்டான வாழ்க்கை வாழணுமா? இதான் டிரிக்ஸ்..!