குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு சென்ற பெண் மரணம்: உறவினர்கள் சாலை மறியல்

குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு சென்ற பெண் மரணம்: உறவினர்கள் சாலை மறியல்
X

 பெண்ணின் உறவினர்கள் இன்று புதுவயல் மேட்டுக்கடை அருகே சாலை மறியல் ஈடுபட்டனர்

உடல்கூராய்வில் தவறு நடந்தது தெரிந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் சாலை மறியல் கைவிடப்பட்டது

குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக மயக்க ஊசி செலுத்தியதில் பெண் மரணம் அடைந்ததற்கு காரணமான மருத்துவர்களை கண்டித்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை மாவட்டம், புதுவயல் அரசு மருத்துவமனையில் நேற்று தமிழ்செல்வி( 33 )என்ற பெண் குடும்ப கட்டுப்பாடு செய்வதற்கு அனுமதிக்கப்பட்ட போது, அறுவை சிகிச்சைக்கு முன்பு மயக்க ஊசி செலுத்திய பின்னர் தமிழ்ச்செல்வி உயிரிழந்தார். பெண்ணின் உறவினர்கள் இன்று காலை புதுவயல் மேட்டுக்கடை அருகே சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாக்கோட்டை அதிமுக சேர்மன் செந்தில்நாதன், உயர் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். அதனைத் தொடர்ந்து அங்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் பேச்சுவார்த்தை நடத்தி இறந்த பெண்ணிற்கு உரிய நிவாரணம் அரசிடமிருந்து பெற்றுத் தருவதாகவும், உடல்கூராய்வுக்குப்பின்னர் தவறு நடந்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.

Tags

Next Story