உயிரிழந்த கோவில் மஞ்சு விரட்டு காளை; கிராமமே அஞ்சலி செலுத்தி நல்லடக்கம்

உயிரிழந்த கோவில் மஞ்சு விரட்டு காளை; கிராமமே அஞ்சலி செலுத்தி நல்லடக்கம்
X

உயிரிழந்த காளையை அடக்க செய்ய ஊர்வலமாக எடுத்துச்செல்லும் மக்கள்.

காரைக்குடி அருகே உயிரிழந்த கோவில் மஞ்சு விரட்டு காளைையை கிராமமே நல்லடக்கம் செய்தது சோகத்தை ஏற்படுத்தியது.

மஞ்சுவிரட்டுக்கு பெயர் பெற்ற சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி அருகே செவரக்கோட்டை கிராமத்தில் உள்ள கருப்பர் கோயில் மஞ்சுவிரட்டு காளை வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்தது.

இதனையடுத்து, செவரக்கோட்டை கிராம மக்கள் தங்கள் வீட்டில் ஒருவர் இறந்தால் எப்படி நல்லடக்கம் செய்வார்களோ அது போல இறந்த மஞ்சு வரட்டு காளைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

காளையை பாரம்பரிய முறைப்படி கொம்பு ஊாதி, கொட்டு அடித்து இளைஞர்கள் ஆட்டம் பாட்டத்துடன் சென்று நல்லடக்கம் செய்தனர் .மஞ்சுவிரட்டு நல்லடக்க ஊர்வலத்தில் இறந்த காளையை கடவுளாக எண்ணி பெண்கள் குழவை பாடல்கள் பாடினர்.

இந்த ஊர்வலத்தில், கிராம மக்கள், குழந்தைகள், பெண்கள் மற்றும் பெரியவர்கள் என அனைவரும் கலந்துகொண்டனர். அடக்கம் செய்யும் போது குழந்தைகள், பெண்கள் சிலர் அழுது கண்ணீர் வடித்தது மஞ்சுவிரட்டு காளை மேல் உள்ள பாசத்தை கட்டியது அருகில் இருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது .

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!