நடிகர் சூர்யா படப்பிடிப்பில் சர்ச்சை: செய்தியாளர்களை மிரட்டிய படக்குழுவினர்
காரைக்குடியில் சூர்யா நடிக்கும் எதற்கும் துனிந்தவன் படபிடிப்பில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை தடுத்து மிரட்டிய பட குழுவினர்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கல்லூரி சாலையில் நடிகர் சூர்யா நடிக்கும் எதற்கும் துனிந்தவன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அந்த சாலை அதிக போக்குவரத்து உள்ள பகுதியில் படப்பிடிப்பு நடைபெறுவதால் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் படப்பிடிப்பை பார்ப்பதற்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அங்கு திரண்டனர். இதனால் கொரானா பரவும் அபாயம் உள்ளதாக செய்தியாளர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை படக்குழுவினர் செய்தி எடுக்க விடாமல் மிரட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. குழந்தைகளுக்கு மூன்றாம் அலை பரவும் இச்சூழ்நிலையில் இதுபோன்ற படப்பிடிப்புகளை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். மேலும் பொதுமக்களுக்கு இடையூராகவும், கொரானா விதிமுறைகளை பின்பற்றாமல் படக்குழுவினர் சூட்டிங் எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu