ஊரடங்கு விதி- கடைபிடிக்காத உணவகத்திற்கு 5,000 அபராதம்.

ஊரடங்கு விதி- கடைபிடிக்காத உணவகத்திற்கு 5,000 அபராதம்.
X
#Curfew rule- 5,000 fine for non-compliance #restaurant.

காரைக்குடியில் உணவகத்திற்கு 5,000 ரூபாய் அபராதம்.

தமிழகமெங்கும் கொரானா தொற்று இரண்டாவது அலையாக வேகமாக பரவி வரும் நிலையில், தமிழக அரசு பொதுமக்கள் நலன் கருதி 20ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு சில புதிய கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவிட்டிருந்தது.

அதன்படி காய்கறி, மளிகை, மற்றும் தேனீர் கடைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி அளித்திருந்த நிலையில், காரைக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே தனியார் உணவு விடுதியில் மாலை 6 மணிக்கு மேலாகியும் தேனீர் வியாபாரம் நடைபெற்றது.

தகவலறிந்து வந்த கல்லல் வட்டார வளர்ச்சி அலுவலர் அழகி மீனாள், ஹோட்டல் உரிமையாளருக்கு 5000 ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டார்.


Tags

Next Story
ai solutions for small business