15 வயதிற்குள்பட்ட இறகுபந்து கலப்பு இரட்டையர் பிரிவில் வென்ற மாணவருக்கு பாராட்டு

15 வயதிற்குள்பட்ட இறகுபந்து கலப்பு இரட்டையர் பிரிவில் வென்ற மாணவருக்கு பாராட்டு
X

ஈரோட்டில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில இறகு பந்து போட்டியில் 15 வயதுக்கு உட்பட்ட கலப்பு இரட்டையர் பிரிவில் இரண்டாம் இடத்தை பிடித்த மாணவர் அஸ்வின்

2028ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காக விளையாடி தங்கப்பதக்கம் வெல்வதே தனது கனவு என்றார் அஸ்வின்

15 வயதிற்குட்பட்ட இறகுபந்து (பேட்மிட்டன்) கலப்பு இரட்டையர் பிரிவில் இரண்டாமிடம் பிடித்த காரைக்குடி மாணவருக்கு பாரட்டு தெரிவிக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே மானகிரியில் உள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கும் அஸ்வின் என்ற மாணவர், ஈரோட்டில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில இறகு பந்து போட்டியில் 15 வயதுக்கு உட்பட்ட கலப்பு இரட்டையர் பிரிவில் இரண்டாம் இடத்தை பிடித்தார். அவருக்கு செட்டிநாடு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. பின்னர் மாணவர் அஸ்வின் கூறியதாவது: இதுவரை மாநில இறகு பந்து போட்டியில் 15 வயதுக்கு உட்பட்ட கலப்பு இரட்டையர் பிரிவில் இரண்டாம் இடத்தையும் 15 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் இரட்டையர் பிரிவில் மூன்றாம் இடத்தையும் வென்றுள்ளதாகவும், 2028ஆம் ஆண்டுநடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காக விளையாடி தங்கப்பதக்கம் வெல்வதே தனது கனவு என்றும் தெரிவித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!