பள்ளி மாணவி பாலியல் வழக்கில் சிபிஐ விசாரணை: சமூக நலக் கூட்டியக்கம் ஆர்ப்பாட்டம்

பள்ளி மாணவி பாலியல் வழக்கில் சிபிஐ விசாரணை: சமூக நலக் கூட்டியக்கம் ஆர்ப்பாட்டம்
X

காரைக்குடி பள்ளி மாணவிபாலியல் பலாத்கார வழக்கில் சிபிஐ விசாரணை கோரி சமூக நலக் கூட்டியக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பள்ளி மாணவிகள் யாரேனும் பாதிப்படைந்துள்ளனரா என்பதை கண்டறிய, சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வலியுறுத்தப்பட்டது.

காரைக்குடி பள்ளி மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் சிபிஐ விசாரணை கோரி சமூக நலக் கூட்டியக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ஆரியபவன் ஹோட்டல் அருகே சமூக நலக் கூட்டியக்கம் சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் காரைக்குடி மக்கள் மன்றம் உள்ளிட்ட இருபத்தியோரு அமைப்புகள் ஒன்றிணைந்த சமூக நலன் கூட்டியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காரைக்குடியில் சில நாட்களுக்கு முன்பு பள்ளி மாணவி அழகு நிலையத்தில் பணிபுரிபவர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் இதுபோல் பள்ளி மாணவிகள் யாரேனும் பாதிப்படைந்துள்ளனரா என்பதை கண்டறிய, சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டு தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Tags

Next Story
ai in future agriculture