துபாயில் இறந்த மகனின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர பெற்றோர்கள் கோரிக்கை

துபாயில் இறந்த மகனின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர பெற்றோர்கள் கோரிக்கை
X

துபாயில்  இறந்த மகனின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர சிவகங்கை கலெக்டரிடம் மனு அளித்துள்ள பெற்றோர்

துபாய்க்கு வேலைக்கு சென்ற இறந்த மகனின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர சிவகங்கை கலெக்டரிடம் பெற்றோர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கண்டனூர் ரோடு, ஐஸ்கேணி வீதியில் வசிக்கும் ஆறுமுகம் மாலினி தம்பதியின் மகன் அனுபிரசாத் துபாயில் உள்ள அஜ்மான் என்ற இடத்தில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்

கடந்த பக்ரீத் அன்று சுவர் இடிந்து விழுந்து இறந்து விட்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து அவரது உடலை இந்தியா கொண்டுவர மத்திய மாநில அரசுகள் உதவ வேண்டும் என்று சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் மதுசூதன ரெட்டி சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் ஆகியோரிடம் பெற்றோர் மனு அளித்துள்ளனர்.

மேலும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து இறந்த மகனின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வரவேண்டும் என பெற்றோர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர்

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!