காரைக்குடியில் வீட்டின் கதவை உடைத்து 6 பவுன் நகை, பணம் கொள்ளை

காரைக்குடியில் வீட்டின் கதவை உடைத்து 6 பவுன் நகை, பணம் கொள்ளை
X

பணம், நகை கொள்ளைபோன வீடு.

காரைக்குடியில் வீட்டின் கதவை உடைத்து 6 பவுன் நகை, பணம் கொள்ளைபோன சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பெரியார் நகர் 6வது விஸ்தரிப்பு பகுதியைச் சேர்ந்தவர் முகமது அலி (54). இவரது மனைவி சாஜகான் பிவி மற்றும் பத்து வயது பேத்தியுடன் நேற்று இரவு வீட்டில் தனியாக தூங்கியுள்ளார்.

இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள், நேற்று இரவு முன்பக்க கதவை உடைத்து பெட்ரூமில் இருந்த ஆறு பவுன் நகை மற்றும் பத்தாயிரம் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். காலையில் எழுந்து பார்த்த சாஜகான்பிவி அதிர்ச்சியடைந்து இது குறித்து காரைக்குடி வடக்கு காவல் நிலையத்திற்கு தகவல் கூறியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வடக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் இதே பகுதியில் நான்கு முகமூடி கொள்ளையர்கள் வீடு புகுந்து கத்தியை காட்டி மிரட்டி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!